சகாக்களின் ஒப்படைகளைத் தரப்படுத்தல்

தரப்படுத்தலை இலகுவாக்குவதற்காக ஒப்படையானது பல "கூறுகளாகப்" பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூறும் ஒப்படையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மதிப்பிட உதவும். மதிப்பீட்டின் வகையைப் பொறுத்து, ஒவ்வொரு கூறுக்கும் நீங்கள்,

  1. பொருத்தமான பொத்தானில் சொடுக்குவதன் மூலம் அல்லது பொருத்தமான இலக்கத்தைத் தெரிவு செய்வதன் மூலம், தரத்தை உள்ளிட வேண்டும்.
  2. அத்தரத்தைத் தெரிவு செய்ததற்கான காரணத்தை அதற்குரிய பின்னூட்டப் பெட்டியில் இட வேண்டும். காரணம் தெட்டத் தெளிவானதாயின் இப்பெட்டியை வெறுமே விடவும். ஆசிரியர் உங்கள் மதிப்பீட்டைப் பார்த்து, அதற்கான காரணத்தைக் கேட்கலாம் என்பதைக் கருத்திற் கொள்க.

ஒரு வகை மதிப்பீட்டில், விடையில் குறிப்பிட்ட அம்சம் உள்ளதா இல்லையா என்று கண்டறிய வேண்டியிருக்கும். இன்னொரு வகை மதிப்பீட்டில் கூறப்பட்ட வாக்கியங்களில் எது விடையுடன் சரியாகப் பொருந்துகின்றது என்று கண்டறிய வேண்டி இருக்கும்.

இப்படிவத்தின் இறுதியிலுள்ள பெட்டியில் நீங்கள் இவ்வேலை சம்பந்தமான பொதுக் குறிப்புரையை உள்ளிடலாம். இது உங்கள் மதிப்பீட்டை நியாயப்படுத்துவதாக அமையும். இது தாழ்மையாக எழுதப்பட்டதாகவும், முடிந்தவரை ஆக்கபூர்வமானதாகவும் அமைய வேண்டும். உங்கள் மதிப்பீடு, சமர்ப்பிப்புக்குரிய மாணவருக்குக் காட்டப்படும்.

நீங்கள் தரங்களை சமர்ப்பித்ததும் சிறிது நேரம், பொதுவாக 30 நிமிடங்கள் உங்களுக்கு அவகாசம் வழங்கப்படும். அதற்குள் நீங்கள் விரும்பினால், தரத்தை மாற்ற முடியும். இக்கால வரையின் பின்னர், மாணவருக்கு அவரது வேலை திருத்தப்பட்டதாக அறிவிக்கப்படும். பின்னர் நீங்கள் மதிப்பீட்டைப் பார்க்கலாம், ஆனால் மாற்ற முடியாது.